88கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்
      கணகண சிரித்து உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என்
      முகில்வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம்
      தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே
      தளர்நடை நடவானோ             (4)