881ஒரு வில்லால் ஓங்கு முந்நீர்
      அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே அரக்கர்கோனைச்
      செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில்
      மதில்-திருவரங்கம் என்னா
கருவிலே திரு இலாதீர்
      காலத்தைக் கழிக்கின்றீரே             (11)