882நமனும் முற்கலனும் பேச
      நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கம் ஆகும்
      நாமங்கள் உடையன் நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது
      அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று
      அதனுக்கே கவல்கின்றேனே             (12)