883எறியும் நீர் வெறிகொள் வேலை
      மாநிலத்து உயிர்கள் எல்லாம்
வெறிகொள் பூந்துளவ மாலை
      விண்ணவர்கோனை ஏத்த
அறிவு இலா மனிசர் எல்லாம்
      அரங்கம் என்று அழைப்பராகில்
பொறியில் வாழ் நரகம் எல்லாம்
      புல் எழுந்து ஒழியும் அன்றே            (13)