889குடதிசை முடியை வைத்துக்
      குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்
      தென்திசை இலங்கை நோக்கிக்
கடல்-நிறக் கடவுள் எந்தை
      அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ
      என் செய்கேன் உலகத்தீரே?            (19)