89முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்
      மொடுமொடு விரைந்து ஓடப்
பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்
      பெயர்ந்து அடியிடுவது போல்
பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்
      பலதேவன் என்னும்
தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான்
      தளர்நடை நடவானோ             (5)