895குளித்து மூன்று அனலை ஓம்பும்
      குறிகொள் அந்தணமை தன்னை
ஒளித்திட்டேன் என்கண் இல்லை
      நின்கணும் பத்தன் அல்லேன்
களிப்பது என் கொண்டு? நம்பீ
      கடல்வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய்
      அரங்க மா நகருளானே             (25)