898உம்பரால் அறியல் ஆகா
      ஒளியுளார் ஆனைக்கு ஆகிச்
செம் புலால் உண்டு வாழும்
      முதலைமேல் சீறி வந்தார்
நம் பரம் ஆயது உண்டே?
      நாய்களோம் சிறுமை ஓரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே
      என் செய்வான் தோன்றினேனே            (28)