90ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்
      உள்ளடி பொறித்து அமைந்த
இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்
      இலச்சினை பட நடந்து
பெருகாநின்ற இன்ப-வெள்ளத்தின்மேல்
      பின்னையும் பெய்து பெய்து
தரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை
      தளர்நடை நடவானோ             (6)