900மனத்தில் ஓர் தூய்மை இல்லை
      வாயில் ஓர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித்
      தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலையானே
      பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய்?
      என்னை ஆளுடைய கோவே            (30)