903மெய் எல்லாம் போக விட்டு
      விரிகுழலாரிற் பட்டுப்
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட
      போழ்க்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன்
      அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன்
      பொய்யனேன் பொய்யனேனே             (33)