904உள்ளத்தே உறையும் மாலை
      உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக்
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
      தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்
      உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப்போய் என்னுள்ளே நான்
      விலவு அறச் சிரித்திட்டேனே             (34)