905தாவி அன்று உலகம் எல்லாம்
      தலைவிளாக்கொண்ட எந்தாய்
சேவியேன் உன்னை அல்லால்
      சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே அமுதே என்தன்
      ஆருயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால்
      பாவியேன் பாவியேனே             (35)