907தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ்
      திருவரங்கத்துள் ஓங்கும்
ஒளியுளார் தாமே யன்றே
      தந்தையும் தாயும் ஆவார்?
எளியது ஓர் அருளும் அன்றே
      என் திறத்து? எம்பிரானார்
அளியன் நம் பையல் என்னார்
      அம்மவோ கொடியவாறே            (37)