91படர் பங்கைய மலர்வாய் நெகிழப்
      பனி படு சிறுதுளி போல்
இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி
      இற்று இற்று வீழநின்று
கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல்
      உடை மணி கணகணென
தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி
      தளர்நடை நடவானோ             (7)