910திருமறுமார்வ நின்னைச்
      சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தர் ஆகில்
      மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவு உறக் கொன்று சுட்டிட்டு
      ஈட்டிய வினையரேலும்
அருவினைப் பயன துய்யார்
      அரங்க மா நகருளானே             (40)