912பழுது இலா ஒழுகல்-ஆற்றுப்
      பல சதுப்பேதிமார்கள்   
இழிகுலத்தவர்களேலும்
      எம் அடியார்கள் ஆகில்
தொழுமின் நீர் கொடுமின் கொண்மின்
      என்று நின்னோடும் ஒக்க
வழிபட அருளினாய் போல்
      மதில்-திருவரங்கத்தானே             (42)