913அமர ஓர் அங்கம் ஆறும்
      வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களிற் தலைவராய
      சாதி-அந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில்
      நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
      அரங்க மா நகருளானே             (43)