915வள எழும் தவள மாட
      மதுரை மா நகரந் தன்னுள்
கவள மால் யானை கொன்ற
      கண்ணனை அரங்க-மாலைத்
துளவத் தொண்டு ஆய தொல் சீர்த்
      தொண்டரடிப் பொடி சொல்
இளைய புன் கவிதையேலும்
      எம்பிராற்கு இனியவாறே             (45)