916கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்
      கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
      வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
      இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலை-கடல் போன்றுளது எங்கும்
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே             (1)