917கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக்
      கூர்ந்தது குண-திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்
      ஈன்பணி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்
      வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே             (2)