92பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே
      அருவிகள் பகர்ந்தனைய
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ
      அணி அல்குல் புடை பெயர
மக்கள் உலகினிற் பெய்து அறியா
      மணிக் குழவி உருவின்
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்
      தளர்நடை நடவானோ             (8)