921 | இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ இறையவர் பதினொரு விடையரும் இவரோ மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் குமர-தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (6) |
|