924ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி
      யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
      கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
      சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள்-ஓலக்கம் அருள
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.             (9)