95ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய
      அஞ்சனவண்ணன் தன்னைத்
தாயர் மகிழ ஒன்னார் தளரத்
      தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால்
      விரித்தன உரைக்கவல்லார்
மாயன் மணிவண்ணன் தாள் பணியும்
      மக்களைப் பெறுவர்களே             (11)