951 | கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும் தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன் உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன் - நாராயணா என்னும் நாமம் (5) |
|