958கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய
      அரு வரை அணை கட்டி
இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள்-தாம்
      இருந்த நல் இமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன
      வேழங்கள் துயர்கூர
பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு
      பிரிதி சென்று அடை நெஞ்சே (2)