959 | துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று இளங்கொடிதிறத்து ஆயர் இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன் இருந்த நல் இமயத்து கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி அறைமிசை வேழம் பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே (3) |
|