964இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை
      இரும் பசி-அது கூர
அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய
      அருவரை இமயத்து
பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று
      எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்
      பிரிதி சென்று அடை நெஞ்சே             (8)