970பீளை சோரக் கண் இடுங்கி பித்து எழ மூத்து இருமி
தாள்கள் நோவத் தம்மில் முட்டி தள்ளி நடவாமுன்
காளை ஆகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான
வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே (4)