971பண்டு காமர் ஆன ஆறும் பாவையர் வாய் அமுதம்
உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றி தள்ளி நடவாமுன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே             (5)