973பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத உந்த உன் தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதுமே             (7)