979 | இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்-கொழுஞ் சுடர் சுழன்ற விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில் வெண் துகில் கொடி என விரிந்து வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (3) |
|