980 | துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள்- தமக்குப் பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான்- அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (4) |
|