981 | பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள்-தன் பெரு முலை சுவைத்திட பெற்ற தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்- சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த செம்பொன் செய் விலங்கலில் இலங்கு வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (5) |
|