999 | சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து சுரி குழல் மடந்தையர்திறத்துக் காதலே மிகுத்து கண்டவா திரிந்த தொண்டனேன் நமன்-தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை அலமரக் கடைந்த நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன்- நைமிசாரணியத்துள் எந்தாய் (3) |
|