முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
| சப்பாணிப் பருவம் |
| 74 | மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல் ஆணிப் பொன்னாற் செய்த ஆய்பொன் உடை மணி பேணி பவளவாய் முத்துஇலங்க பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழற் குட்டனே சப்பாணி (1) | |
|
| |
|
|
| 75 | பொன் அரைநாணொடு மாணிக்கக் கிண்கிணி தன் அரை ஆட தனிச் சுட்டி தாழ்ந்து ஆட என் அரை மேல்நின்று இழிந்து உங்கள் ஆயர்தம் மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி (2) | |
|
| |
|
|
| 76 | பல் மணி முத்து இன்பவளம் பதித்தன்ன என் மணிவண்ணன் இலங்கு பொற் தோட்டின் மேல் நின் மணிவாய் முத்து இலங்க நின் அம்மைதன் அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே சப்பாணி (3) | |
|
| |
|
|
| 77 | தூ நிலாமுற்றத்தே போந்து விளையாட வான் நிலா அம்புலீ சந்திரா வா என்று நீ நிலா நிற் புகழாநின்ற ஆயர்தம் கோ நிலாவ கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி (4) | |
|
| |
|
|
| 78 | புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி (5) | |
|
| |
|
|
| 79 | தாரித்து நூற்றுவர் தந்தை சொற் கொள்ளாது போர் உய்த்து வந்து புகுந்தவர் மண் ஆளப் பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேர் உய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி (6) | |
|
| |
|
|
| 80 | பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை இரந்திட்ட கைம்மேல் எறிதிரை மோதக் கரந்திட்டு நின்ற கடலைக் கலங்கச் சரந் தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்க விற்கையனே சப்பாணி (7) | |
|
| |
|
|
| 81 | குரக்கு இனத்தாலே குரைகடல் தன்னை நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை அரக்கர் அவிய அடு கணையாலே நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே சப்பாணி (8) | |
|
| |
|
|
| 82 | அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க உருவாய் உளந் தொட்டு இரணியன் ஒண்மார்வு அகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி (9) | |
|
| |
|
|
| 83 | அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன்கயிறு ஆகக் கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார்முகில் வண்ணனே சப்பாணி (10) | |
|
| |
|
|
| 84 | ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோவினை நாட்கமழ் பூம்பொழில் வில்லிபுத்தூர்ப் பட்டன் வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும் வேட்கையினால் சொல்லுவார் வினை போதுமே (11) | |
|
| |
|
|