முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
| குழல்வாரக் காக்கையை வா எனல் |
| 161 | பின்னை மணாளனை பேரிற் கிடந்தானை முன்னை அமரர் முதற் தனி வித்தினை என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய் (1) | |
|
| |
|
|
| 162 | பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயாமலர் வண்ணன் கண்ணன் கருங்குழல் தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய் தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் (2) | |
|
| |
|
|
| 163 | திண்ணக் கலத்திற் திரை உறிமேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல் அமரர் பெருமானை ஆயர்தம் கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய் கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் (3) | |
|
| |
|
|
| 164 | பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய் பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய் (4) | |
|
| |
|
|
| 165 | கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப் பற்றி எறிந்த பரமன் திருமுடி உற்றன பேசி நீ ஓடித் திரியாதே அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய் ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய் (5) | |
|
| |
|
|
| 166 | கிழக்கிற் குடி மன்னர் கேடு இலாதாரை அழிப்பான் நினைந்திட்டு அவ் ஆழிஅதனால் விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானைக் குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய் (6) | |
|
| |
|
|
| 167 | பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும் உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர் வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய் மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய் (7) | |
|
| |
|
|
| 168 | உந்தி எழுந்த உருவ மலர்தன்னில் சந்தச் சதுமுகன்தன்னைப் படைத்தவன் கொந்தக் குழலைக் குறந்து புளி அட்டித் தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய் (8) | |
|
| |
|
|
| 169 | மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த முன் இவ் உலகினை முற்றும் அளந்தவன் பொன்னின் முடியினைப் பூ அணைமேல் வைத்துப் பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய் பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய் (9) | |
|
| |
|
|
| 170 | கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன் வண்டு ஆர் குழல்வார வா என்ற ஆய்ச்சி சொல் விண் தோய் மதில் வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல் கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே (10) | |
|
| |
|
|