| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| திருமாலிருஞ்சோலை-2 | 
					
			
			
      | | 348 | உருப்பிணி நங்கைதன்னை மீட்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற உருப்பனை ஓட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை
 பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு
 விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ் சோலையதே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 349 | கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையில் மடிய வளர்ந்த மணிவண்ணன் மலை
 நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியைச்
 செஞ்சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ் சோலையதே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 350 | மன்னு நரகன்தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்த கடல்வண்ணன் மலை
 புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
 பொன்அரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே            (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 351 | மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை
 கோவலர் கோவிந்தனைக் குற மாதர்கள் பண் குறிஞ்சிப்
 பா ஒலி பாடி நடம் பயில் மாலிருஞ் சோலையதே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 352 | பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன்தன்னை அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
 குல மலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை
 நில மலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலையதே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 353 | பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர்தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
 பாண் தகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருகத்
 தோண்டல் உடைய மலை தொல்லை மாலிருஞ் சோலையதே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 354 | கனங்குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழு ஏற்றுவித்த ஏழிற் தோள் எம் இராமன் மலை
 கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம்
 இனம் குழு ஆடும் மலை எழில் மாலிருஞ் சோலையதே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 355 | எரி சிதறும் சரத்தால் இலங்கையினைத் தன்னுடைய வரி சிலை வாயிற் பெய்து வாய்க் கோட்டம் தவிர்த்து உகந்த
 அரையன் அமரும் மலை அமரரொடு கோனும் சென்று
 திரிசுடர் சூழும் மலை திரு மாலிருஞ் சோலையதே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 356 | கோட்டுமண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
 ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று
 ஓட்டரும் தண் சிலம்பாறு உடை மாலிருஞ் சோலையதே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 357 | ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலக ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை
 ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும்
 ஆயிரம் பூம் பொழிலும் உடை மாலிருஞ் சோலையதே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 358 | மாலிருஞ்சோலை என்னும் மலையை உடைய மலையை நாலிரு மூர்த்திதன்னை நால் வேதக்-கடல் அமுதை
 மேல் இருங் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்
 மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |