| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| திருக்கோட்டியூர் | 
					
			
			
      | | 359 | நா அகாரியம் சொல் இலாதவர் நாள்தொறும் விருந்து ஓம்புவார்
 தேவ காரியம் செய்து வேதம்
 பயின்று வாழ் திருக்கோட்டியூர்
 மூவர்காரியமும் திருத்தும்
 முதல்வனைச் சிந்தியாத அப்
 பாவகாரிகளைப் படைத்தவன்
 எங்ஙனம் படைத்தான் கொலோ             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 360 | குற்றம் இன்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கு அனுகூலராய்ச்
 செற்றம் ஒன்றும் இலாத வண்கையி
 னார்கள் வாழ் திருக்கோட்டியூர்த்
 துற்றி ஏழ் உலகு உண்ட தூ மணி
 வண்ணன் தன்னைத் தொழாதவர்
 பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு
 நோய்செய்வான் பிறந்தார்களே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 361 | வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும்
 திண்ணை சூழ் திருக்கோட்டியூர்த் திரு
 மாலவன் திருநாமங்கள்
 எண்ணக் கண்ட விரல்களால் இறைப்
 போதும் எண்ணகிலாது போய்
 உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக்
 கவளம் உந்துகின்றார்களே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 362 | உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல் மட அன்னங்கள்
 நிரைகணம் பரந்து ஏறும் செங்
 கமல வயற் திருக்கோட்டியூர்
 நரகநாசனை நாவிற் கொண்டு அழை
 யாத மானிட சாதியர்
 பருகு நீரும் உடுக்குங் கூறையும்
 பாவம் செய்தன தாம் கொலோ             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 363 | ஆமையின் முதுகத்திடைக் குதி கொண்டு தூ மலர் சாடிப் போய்த்
 தீமை செய்து இளவாளைகள் விளை
 யாடு நீர்த் திருக்கோட்டியூர்
 நேமி சேர் தடங்கையினானை
 நினைப்பு இலா வலி நெஞ்சு உடைப்
 பூமி-பாரங்கள் உண்ணும் சோற்றினை
 வாங்கிப் புல்லைத் திணிமினே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 364 | பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
 ஏதம் ஒன்றும் இலாத வண்கையி
 னார்கள் வாழ் திருக்கோட்டியூர்
 நாதனை நரசிங்கனை நவின்று
 ஏத்துவார்கள் உழக்கிய
 பாத தூளி படுதலால் இவ்
 உலகம் பாக்கியம் செய்ததே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 365 | குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று கூடி ஆடி விழாச் செய்து
 திருந்து நான்மறையோர் இராப்பகல்
 ஏத்தி வாழ் திருக்கோட்டியூர்க்
 கருந் தடமுகில் வண்ணனைக் கடைக்
 கொண்டு கைதொழும் பத்தர்கள்
 இருந்த ஊரில் இருக்கும் மானிடர்
 எத்தவங்கள் செய்தார் கொலோ             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 366 | நளிர்ந்த சீலன் நயாசலன் அபி மான துங்கனை நாள்தொறும்
 தெளிந்த செல்வனைச் சேவகங் கொண்ட
 செங்கண் மால் திருக்கோட்டியூர்க்
 குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம்
 பாடுவார் உள்ள நாட்டினுள்
 விளைந்த தானியமும் இராக்கதர்
 மீது கொள்ளகிலார்களே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 367 | கொம்பின் ஆர் பொழில்வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர்ச்
 செம்பொன் ஆர் மதில் சூழ் செழுங் கழ
 னி உடைத் திருக்கோட்டியூர்
 நம்பனை நரசிங்கனை நவின்று
 ஏத்துவார்களைக் கண்டக்கால்
 எம்பிரான் தன சின்னங்கள் இவர்
 இவர் என்று ஆசைகள் தீர்வனே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 368 | காசின் வாய்க் கரம் விற்கிலும் கர வாது மாற்று இலி சோறு இட்டுத்
 தேச வார்த்தை படைக்கும் வண்கையி
 னார்கள் வாழ் திருக்கோட்டியூர்க்
 கேசவா புருடோத்தமா கிளர்
 சோதியாய் குறளா என்று
 பேசுவார் அடியார்கள் எம்தம்மை
 விற்கவும் பெறுவார்களே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 369 | சீத நீர் புடை சூழ் செழுங் கழனி உடைத் திருக்கோட்டியூர் ஆதியான் அடியாரையும் அடிமையின்றித் திரிவாரையும்
 கோதில் பட்டர்பிரான் குளிர் புதுவைமன் விட்டுசித்தன் சொல்
 ஏதம் இன்றி உரைப்பவர் இருடீகேசனுக்கு ஆளரே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |