முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
| திருமாலின் நாமம் இடுதல் |
| 380 | காசும் கறை உடைக் கூறைக்கும் அங்கு ஓர் கற்றைக்கும் ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள் கேசவன் பேர் இட்டு நீங்கள் தேனித்து இருமினோ நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (1) | |
|
| |
|
|
| 381 | அங்கு ஒரு கூறை அரைக்கு உடுப்பதன் ஆசையால் மங்கிய மானிட சாதியின் பேர் இடும் ஆதர்காள் செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால் நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (2) | |
|
| |
|
|
| 382 | உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர்? பிச்சை புக்கு ஆகிலும் எம்பிரான் திருநாமமே நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (3) | |
|
| |
|
|
| 383 | மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை மானிட சாதியின் பேர் இட்டால் மறுமைக்கு இல்லை வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால் நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (4) | |
|
| |
|
|
| 384 | மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை மலம் உடை ஊத்தையின் பேர் இட்டால் மறுமைக்கு இல்லை குலம் உடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால் நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (5) | |
|
| |
|
|
| 385 | நாடும் நகரும் அறிய மானிடப் பேர் இட்டுக் கூடி அழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே சாடு இறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (6) | |
|
| |
|
|
| 386 | மண்ணிற் பிறந்து மண் ஆகும் மானிடப் பேர் இட்டு அங்கு எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள் கண்ணுக்கு இனிய கருமுகில் வண்ணன் நாமமே நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (7) | |
|
| |
|
|
| 387 | நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால் நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம் செம்பெருந் தாமரைக் கண்ணன் பேர் இட்டு அழைத்தக்கால் நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (8) | |
|
| |
|
|
| 388 | ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள் மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேர் இட்டு கோத்துக் குழைத்துக் குணாலம் ஆடித் திரிமினோ நாத் தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (9) | |
|
| |
|
|
| 389 | சீர் அணி மால் திருநாமமே இடத் தேற்றிய வீர் அணி தொல்புகழ் விட்டுசித்தன் விரித்த சொல் ஓர் அணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர் பேர் அணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே (10) | |
|
| |
|
|