| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல் | 
					
			
			
      | | 422 | துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணை ஆவர் என்றே
 ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்
 ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
 எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு
 ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்
 அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
 அரங்கத்து அரவணைப் பள்ளியானே            (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 423 | சாம் இடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கரம் ஏந்தினானே
 நா மடித்து என்னை அனேக தண்டம்
 செய்வதா நிற்பர் நமன்தமர்கள்
 போம் இடத்து உன்திறத்து எத்தனையும்
 புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
 ஆம் இடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன்
 அரங்கத்து அரவணைப் பள்ளியானே            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 424 | எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன்-தமர் பற்றும்போது
 நில்லுமின் என்னும் உபாயம் இல்லை
 நேமியும் சங்கமும் ஏந்தினானே
 சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம்
 சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
 அல்லற் படாவண்ணம் காக்க வேண்டும்
 அரங்கத்து அரவணைப் பள்ளியானே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 425 | ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியாப் பெருமையோனே
 முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி
 மூன்று எழுத்து ஆய முதல்வனே!ஓ
 அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி
 அஞ்ச நமன்தமர் பற்றல் உற்ற
 அற்றைக்கு நீ என்னைக் காக்கவேண்டும்
 அரங்கத்து அரவணைப் பள்ளியானே            (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 426 | பை அரவின் அணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம முர்த்தி
 உய்ய உலகு படைக்க வேண்டி
 உந்தியிற் தோற்றினாய் நான்முகனை
 வைய மனிசரைப் பொய் என்று எண்ணிக்
 காலனையும் உடனே படைத்தாய்
 ஐய இனி என்னைக் காக்கவேண்டும்
 அரங்கத்து அரவணைப் பள்ளியானே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 427 | தண்ணனவு இல்லை நமன்தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யாநிற்பர்
 மண்ணொடு நீரும் எரியும் காலும்
 மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய்
 எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம்
 எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
 அண்ணலே நீ என்னைக் காக்கவேண்டும்
 அரங்கத்து அரவணைப் பள்ளியானே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 428 | செஞ்சொல் மறைப்பொருள் ஆகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே
 எஞ்சலில் என்னுடை இன் அமுதே
 ஏழ் உலகும் உடையாய் என் அப்பா
 வஞ்ச உருவின் நமன்தமர்கள்
 வலிந்து நலிந்து என்னைப் பற்றும்போது
 அஞ்சலை என்று என்னைக் காக்கவேண்டும்
 அரங்கத்து அரவணைப் பள்ளியானே            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 429 | நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த
 ஊனே புகே என்று மோதும்போது அங்கு
 உன்னை நான் ஒன்றும் நினைக்கமாட்டேன்
 வான் ஏய வானவர் தங்கள் ஈசா
 மதுரைப் பிறந்த மா மாயனே என்
 ஆனாய் நீ என்னைக் காக்கவேண்டும்
 அரங்கத்து அரவணைப் பள்ளியானே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 430 | குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
 அன்று முதல் இன்று அறுதியாக ஆதி அஞ் சோதி மறந்து அறியேன்
 நன்றும் கொடிய நமன்தமர்கள்
 நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது
 அன்று அங்கு நீ என்னைக் காக்கவேண்டும்
 அரங்கத்து அரவணைப் பள்ளியானே            (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 431 | மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
 ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை
 அரங்கத்து அரவணைப் பள்ளியானை
 வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன்
 விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
 தூய மனத்தினர் ஆகி வல்லார்
 தூ மணிவண்ணனுக்கு ஆளர் தாமே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |