| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல் | 
					
			
			
      | | 452 | துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்துப்
 புக்கினிற் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப்
 போக விடுவதுண்டே?
 மக்கள் அறுவரைக் கல்லிடை மோத
 இழந்தவள் தன்வயிற்றிற்
 சிக்கென வந்து பிறந்து நின்றாய்!திரு
 மாலிருஞ் சோலை எந்தாய்             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 453 | வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உன் தன் இந்திர-ஞாலங்களால்
 ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ
 ஒருவர்க்கும் மெய்யன் அல்லை
 அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடைத்
 தீவினை தீர்க்கல் உற்றுத்
 தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தம் உடைத் திரு
 மாலிருஞ் சோலை எந்தாய்             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 454 | உனக்குப் பணி செய்திருக்கும் தவம் உடை யேன் இனிப் போய் ஒருவன்
 தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின்
 சாயை அழிவு கண்டாய்
 புனத்தினைக் கிள்ளிப் புது அவி காட்டி உன்
 பொன்னடி வாழ்க என்று
 இனத்துக் குறவர் புதியது உண்ணும் எழில்
 மாலிருஞ் சோலை எந்தாய்             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 455 | காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கு ஓர் நிழல் இல்லை நீர் இல்லை உன்
 பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம்
 நான் எங்கும் காண்கின்றிலேன்
 தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கு ஓர்
 பொய்ச்சுற்றம் பேசிச் சென்று
 பேதம் செய்து எங்கும் பிணம்படுத்தாய் திரு
 மாலிருஞ் சோலை எந்தாய்             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 456 | காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல்
 மேலும் எழா மயிர்க் கூச்சும் அறா என
 தோள்களும் வீழ்வு ஒழியா
 மால் உகளாநிற்கும் என் மனனே உன்னை
 வாழத் தலைப்பெய்திட்டேன்
 சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திரு
 மாலிருஞ் சோலை எந்தாய்             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 457 | எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
 ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு
 மருந்து அறிவாரும் இல்லை
 மருத்துவனாய் நின்ற மா மணிவண்ணா
 மறு பிறவி தவிரத்
 திருத்தி உன் கோயிற் கடைப் புகப் பெய் திரு
 மாலிருஞ் சோலை எந்தாய் (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 458 | அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்
 இக்கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்
 சேல் என்று கை கவியாய்
 சக்கரமும் தடக்கைகளும் கண்களும்
 பீதக ஆடையொடும்
 செக்கர் நிறத்துச் சிவப்புடையாய் திரு
 மாலிருஞ் சோலை எந்தாய்             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 459 | எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றொடு நாளை என்றே
 இத்தனை காலமும் போய்க் கிறிப்பட்டேன்
 இனி உன்னைப் போகலொட்டேன்
 மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர்
 நூற்றுவரைக் கெடுத்தாய்
 சித்தம் நின்பாலது அறிதி அன்றே திரு
 மாலிருஞ் சோலை எந்தாய்             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 460 | அன்று வயிற்றிற் கிடந்திருந்தே அடி மை செய்யல் உற்றிருப்பன்
 இன்று வந்து இங்கு உன்னைக் கண்டுகொண்டேன் இனிப்
 போக விடுவதுண்டே?
 சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும்
 திருச் சக்கரம் அதனால்
 தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திரு
 மாலிருஞ் சோலை எந்தாய்             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 461 | சென்று உலகம் குடைந்தாடும் சுனைத் திரு மாலிருஞ் சோலை தன்னுள்
 நின்ற பிரான் அடிமேல் அடிமைத் திறம்
 நேர்பட விண்ணப்பஞ் செய்
 பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புது
 வைக்கோன் விட்டுசித்தன்
 ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் உல
 கம் அளந்தான் தமரே    (10)
 | 
 |  | 
		
			|  |  |  |