முதல் ஆயிரம் ஆண்டாள் நாச்சியார் திருமொழி
|
| காதல்-நோய் செய்த பரிசு |
| 596 | கார்க்கோடற் பூக்காள் கார்க்கடல் வண்ணன் என்மேல் உம்மைப் போர்க் கோலம் செய்து போர விடுத்தவன் எங்கு உற்றான்? ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது? அணி துழாய்த் தார்க்கு ஓடும் நெஞ்சந் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ (1) | |
|
| |
|
|
| 597 | மேல்-தோன்றிப் பூக்காள் மேல்-உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில் மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக்கொள்கிற்றிரே? (2) | |
|
| |
|
|
| 598 | கோவை மணாட்டி நீ உன் கொழுங்கனி கொண்டு எம்மை ஆவி தொலைவியேல் வாயழகர்தம்மை அஞ்சுதும் பாவியேன் தோன்றிப் பாம்பு-அணையார்க்கும் தம் பாம்புபோல் நாவும் இரண்டு உள ஆய்த்து நாணிலியேனுக்கே (3) | |
|
| |
|
|
| 599 | முல்லைப் பிராட்டி நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம் கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய் அன்றே? (4) | |
|
| |
|
|
| 600 | பாடும் குயில்காள் ஈது என்ன பாடல்? நல் வேங்கட- நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின் ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள்செய்து கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே (5) | |
|
| |
|
|
| 601 | கண மா மயில்காள் கண்ணபிரான் திருக்கோலம் போன்று அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு அடி வீழ்கின்றேன் பணம் ஆடு அரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள் மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்மினே (6) | |
|
| |
|
|
| 602 | நடம் ஆடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை நடம்-ஆட்டம் காணப் பாவியேன் நான் ஓர் முதல் இலேன் குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ-மிறை செய்து எம்மை உடை மாடு கொண்டான் உங்களுக்கு இனி ஒன்று போதுமே? (7) | |
|
| |
|
|
| 603 | மழையே மழையே மண் புறம் பூசி உள்ளாய் நின்று மெழுகு ஊற்றினாற் போல் ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற அழகப்பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்படத் தழுவ நின்று என்னைத் ததைத்துக்கொண்டு ஊற்றவும் வல்லையே? (8) | |
|
| |
|
|
| 604 | கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்கு-உறுத்து உடலுள் புகுந்துநின்ற ஊறல் அறுத்தவற்கு என்னையும் உடலுள் புகுந்துநின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என் நடலைகள் எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே? (9) | |
|
| |
|
|
| 605 | நல்ல என் தோழி நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வதென்? வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே (10) | |
|
| |
|
|