| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருவேங்கடம் 4 | 
					
			
			
      | | 1047 | வானவர்-தங்கள் சிந்தை போல என் நெஞ்சமே இனிது உவந்து மா தவ
 மானவர்-தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை
 கானவர் இடு கார் அகில்-புகை
 ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள்
 ஆன அந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1048 | உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன் உகந்தவர்-தம்மை மண்மிசைப்
 பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
 குறவர் மாதர்களோடு வண்டு
 குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
 அறவன் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1049 | இண்டை ஆயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
 கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
 வண்டு வாழ் வட வேங்கட மலை
 கோயில் கொண்டு அதனோடும் மீமிசை-
 அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1050 | பாவியாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண்மிசை
 மேவி ஆட்கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை
 கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்
 வேங்கட மலை ஆண்டு வானவர்
 ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1051 | பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை
 தங்கள் தேவரும் தாங்களுமே ஆக என் நெஞ்சம் என்பாய்
 எங்கும் வானவர் தானவர் நிறைந்து
 ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள்
 அம் கண் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1052 | துவரி ஆடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்
 தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய்
 கவரி மாக் கணம் சேரும் வேங்கடம்
 கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை
 அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1053 | தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
 நெருக்குவார் அலக்கண்-அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
 மருள்கள் வண்டுகள் பாடும் வேங்கடம்
 கோயில் கொண்டு அதனோடும் வானிடை
 அருக்கன் மேவிநிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1054 | சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்-
 தே என் நெஞ்சம் என்பாய் எனக்கு ஒன்று சொல்லாதே
 வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி
 வேங்கட மலை கோயில் மேவிய
 ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1055 | கூடி ஆடி உரைத்ததே உரைத் தாய் என் நெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
 பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக் காண்கிலார்
 ஆடு தாமரையோனும் ஈசனும்
 அமரர்-கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து
 ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1056 | மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
 அன்னம் ஆய் நிகழ்ந்த அமரர் பெருமானைக்
 கன்னி மா மதிள் மங்கையர் கலி
 கன்றி இன் தமிழால் உரைத்த இம்
 மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |