| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திரு எவ்வுளூர் | 
					
			
			
      | | 1057 | காசை ஆடை மூடி ஓடிக் காதல் செய் தானவன் ஊர் நாசம் ஆக நம்ப வல்ல நம்பி நம் பெருமான்
 வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று
 ஏச நின்ற எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1058 | தையலாள்மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன் பொய் இலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
 செய்த வெம் போர்-தன்னில் அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள
 எய்த எந்தை எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1059 | முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன் ஊர்-தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
 பின் ஓர் தூது ஆதி-மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்
 இன்னார் தூதன் என நின்றான்-எவ்வுள் கிடந்தானே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1060 | பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால் வெந் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
 நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான்
 எந்தை தந்தை தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1061 | பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆல் இலைமேல் சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
 நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி
 ஏலம் நாறும் பைம் புறவின்-எவ்வுள் கிடந்தானே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1062 | சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும் ஆத்தன் நம்பி செங்கண் நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம்
 மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது
 ஏத்தும் நம்பி எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1063 | திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசைமுகனார் தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண்
 தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கழல் சூடநின்ற
 எங்கள் அப்பன் எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1064 | முனிவன் மூர்த்தி மூவர் ஆகி வேதம் விரித்து உரைத்த புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்-கோன்
 தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு
 இனியன் எந்தை எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1065 | பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள் வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
 அந்தரத்தில் வாழும் வானோர்-நாயகன் ஆய் அமைந்த
 இந்திரற்கும் தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1066 | இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர்-கோன் கலியன்
 கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈர் ஐந்தும் வல்லார்
 அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர்-அமர் உலகே (10)
 | 
 |  | 
		
			|  |  |  |