இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருவாலி:1 |
| 1187 | வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததன்பின் வணங்கும் என் சிந்தனைக்கு இனியாய்-திருவே என் ஆர் உயிரே அம் தளிர் அணி ஆர் அசோகின் இளந் தளிர்கள் கலந்து அவை எங்கும் செந் தழல் புரையும் திருவாலி அம்மானே (1) | |
|
| |
|
|
| 1188 | நீலத் தட வரை மா மணி நிகழக் கிடந்ததுபோல் அரவு அணை வேலைத்தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்- சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட மழை முகில் போன்று எழுந்து எங்கும் ஆலைப் புகை கமழும் அணி ஆலி அம்மானே (2) | |
|
| |
|
|
| 1189 | நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன்-எறி நீர் வளஞ் செறுவில் செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார் முகத்து எழு வாளை போய் கரும்பு அந் நல் நாடு அணையும் அணி ஆலி அம்மானே (3) | |
|
| |
|
|
| 1190 | மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார்-தம் சிந்தை மறந்து வந்து நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்- புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய்-அகன் பணைகள் கலந்து எங்கும் அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே (4) | |
|
| |
|
|
| 1191 | நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை-அடி தொழுது ஏத்தும் என் மனம் வாட நீ நினையேல்-மரம் எய்த மா முனிவா பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும் ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே (5) | |
|
| |
|
|
| 1192 | கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கைதொழுது எழும் புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன்- சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும் அந்தணாளர் அறா அணி ஆலி அம்மானே (6) | |
|
| |
|
|
| 1193 | உலவு திரைக் கடல் பள்ளிகொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அப் புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகலொட்டேன்- நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின்மிசை மலி அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே (7) | |
|
| |
|
|
| 1194 | சங்கு தங்கு தடங் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ!- கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளந் தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே (8) | |
|
| |
|
|
| 1195 | ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள் வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம்-எந்தாய் நீதி ஆகிய வேத மா முனி யாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய் அணி ஆலி அம்மானே (9) | |
|
| |
|
|
| 1196 | புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென் ஆலி இருந்த மாயனை கல்லின் மன்னு திண் தோள் கலியன் ஒலிசெய்த நல்ல இன் இசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு இடம் ஆகும்-வான் உலகே (10) | |
|
| |
|
|