| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருநாங்கூர் வண்புருடோத்தமம் | 
					
			
			
      | | 1257 | கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி-அவை பத்தும்
 அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு
 அளித்தவன் உறை கோயில்-
 செம் பலா நிரை செண்பகம் மாதவி
 சூதகம் வாழைகள் சூழ்
 வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர
 ்-வண்புருடோத்தமமே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1258 | பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி அக் காளியன் பண அரங்கில்
 ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த
 உம்பர்-கோன் உறை கோயில்-
 நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் ஐ
 வேள்வியோடு ஆறு அங்கம்
 வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்
 -வண்புருடோத்தமமே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1259 | அண்டர் ஆனவர் வானவர்-கோனுக்கு என்று அமைத்த சோறு-அது எல்லாம்
 உண்டு கோ-நிரை மேய்த்து அவை காத்தவன்
 உகந்து இனிது உறை கோயில்-
 கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்
 குல மயில் நடம் ஆட
 வண்டு -தான் இசை பாடிடும் நாங்கூர்
 -வண்புருடோத்தமமே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1260 | பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடிப் புக்கு
 ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை
 உதைத்தவன் உறை கோயில்-
 கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு
 கழனியில் மலி வாவி
 மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்
 -வண்புருடோத்தமமே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1261 | சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து ஈசன் தன் படையொடும் கிளையோடும்
 ஓட வாணனை ஆயிரம் தோள்களும்
 துணித்தவன் உறை கோயில்-
 ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்
 பகலவன் ஒளி மறைக்கும்
 மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்-
 வண்புருடோத்தமமே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1262 | அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
 கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய
 கண்ணன் வந்து உறை கோயில்-
 கொங்கை கோங்கு-அவை காட்ட வாய் குமுதங்கள்
 காட்ட மா பதுமங்கள்
 மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்-
 வண்புருடோத்தமமே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1263 | உளைய ஒண் திறல் பொன்பெயரோன்-தனது உரம் பிளந்து உதிரத்தை
 அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய
 அப்பன் வந்து உறை கோயில்-
 இளைய மங்கையர் இணை-அடிச் சிலம்பினோடு
 எழில் கொள் பந்து அடிப்போர் கை
 வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்-
 வண்புருடோத்தமமே                 (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1264 | வாளை ஆர் தடங் கண் உமை-பங்கன் வன் சாபம் மற்று அது நீங்க
 மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம்
 முகில் வண்ணன் உறை கோயில்-
 பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண்
 பழம் விழ வெருவிப் போய்
 வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்-
 வண்புருடோத்தமமே                (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1265 | இந்து வார் சடை ஈசனைப் பயந்த நான் முகனைத் தன் எழில் ஆரும்
 உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்
 உகந்து இனிது உறை கோயில்-
 குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து தன்
 குருளையைத் தழுவிப் போய்
 மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்-
 வண்புருடோத்தமமே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1266 | மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண்புருடோத்தமத்துள்
 அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்
 ஆலி மன் அருள் மாரி
 பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல் இப்
 பத்தும் வல்லார் உலகில்
 எண் இலாத பேர் இன்பம் உற்று இமையவ
 ரோடும் கூடுவரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |