இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருவிந்தளூர் |
| 1327 | நும்மைத் தொழுதோம் நும்-தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம் இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆ ஆ என்று இரங்கி நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே? (1) | |
|
| |
|
|
| 1328 | சிந்தை-தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என் எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே (2) | |
|
| |
|
|
| 1329 | பேசுகின்றது இதுவே-வையம் ஈர் அடியால் அளந்த மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர்!-உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே (3) | |
|
| |
|
|
| 1330 | ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம் பெருமான் வாசி வல்லீர் இந்தளூரீர்!-வாழ்ந்தே போம் நீரே (4) | |
|
| |
|
|
| 1331 | தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும் ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால் தாய் எம் பெருமான் தந்தை தந்தை ஆவீர் அடியோமுக்- கே எம் பெருமான் அல்லீரோ நீர்?-இந்தளூரீரே (5) | |
|
| |
|
|
| 1332 | சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு-இவ் உலகத்தில் எல்லாம் அறிவீர்-ஈதே அறியீர் இந்தளூரீரே (6) | |
|
| |
|
|
| 1333 | மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மைப் பணி அறியா வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே காட்டீர் ஆனீர் நும்-தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த நாட்டே வந்து தொண்டர் ஆன நாங்கள் உய்யோமே? (7) | |
|
| |
|
|
| 1334 | முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்- பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே (8) | |
|
| |
|
|
| 1335 | எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் ஏழ் அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால் சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே (9) | |
|
| |
|
|
| 1336 | ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக் கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய்த சீர் ஆர் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்தில் ஆர் ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (10) | |
|
| |
|
|