| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருக்கூடலூர் | 
					
			
			
      | | 1357 | தாம் தம் பெருமை அறியார் தூது வேந்தர்க்கு ஆய வேந்தர் ஊர்போல்-
 காந்தள் விரல் மென் கலை நல் மடவார்
 கூந்தல் கமழும்-கூடலூரே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1358 | செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை பெறும் தண் கோலம் பெற்றார் ஊர்போல்-
 நறும் தண் தீம் தேன் உண்ட வண்டு
 குறிஞ்சி பாடும்-கூடலூரே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1359 | பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன் உள்ளம் புகுந்த ஒருவர் ஊர்போல்-
 கள்ள நாரை வயலுள் கயல்மீன்
 கொள்ளை கொள்ளும்-கூடலூரே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1360 | கூற்று ஏர் உருவின் குறள் ஆய் நிலம் நீர் ஏற்றான் எந்தை பெருமான் ஊர்போல்-
 சேற்று ஏர் உழவர் கோதைப் போது ஊண்
 கோல் தேன் முரலும்-கூடலூரே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1361 | தொண்டர் பரவ சுடர் சென்று அணவ அண்டத்து அமரும் அடிகள் ஊர்போல்-
 வண்டல் அலையுள் கெண்டை மிளிர
 கொண்டல் அதிரும்-கூடலூரே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1362 | தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் துக்கம் துடைத்த துணைவர் ஊர்போல்-
 எக்கல் இடு நுண் மணல்மேல் எங்கும்
 கொக்கின் பழம் வீழ்-கூடலூரே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1363 | கருந் தண் கடலும் மலையும் உலகும் அருந்தும் அடிகள் அமரும் ஊர்போல-்
 பெருந் தண் முல்லைப்பிள்ளை ஓடிக்
 குருந்தம் தழுவும்-கூடலூரே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1364 | கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர்- மலை வாழ் எந்தை மருவும் ஊர்போல்-
 இலை தாழ் தெங்கின் மேல்நின்று இளநீர்க்
 குலை தாழ் கிடங்கின்-கூடலூரே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1365 | பெருகு காதல் அடியேன் உள்ளம் உருகப் புகுந்த ஒருவர் ஊர் போல்-
 அருகு கைதை மலர கெண்டை
 குருகு என்று அஞ்சும்-கூடலூரே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1366 | காவிப் பெருநீர் வண்ணன் கண்ணன் மேவித் திகழும் கூடலூர்மேல்
 கோவைத் தமிழால் கலியன் சொன்ன
 பாவைப் பாட பாவம் போமே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |